ஜனாதிபதி தேர்தல் : தபால் மூல வாக்களிப்பிற்கான இரண்டாம் நாள் இன்று

Election Commission of Sri Lanka Government Employee Sri Lanka Presidential Election 2024
By Sathangani Sep 05, 2024 05:12 AM GMT
Report

சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இரண்டாவது நாளாக இன்றும் (05) இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) தெரிவித்துள்ளது.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு, 7 இலட்சத்து 12 ஆயிரத்து 319 அரச பணியாளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

இந்தநிலையில், நேற்று (04) ஆரம்பமான தபால் மூல வாக்களிப்பு நாளை (06) வரையில் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் அரியநேத்திரனுக்கே எமது ஆதரவு - தமிழர் விடுதலைக் கூட்டணி அறிவிப்பு

ஜனாதிபதி வேட்பாளர் அரியநேத்திரனுக்கே எமது ஆதரவு - தமிழர் விடுதலைக் கூட்டணி அறிவிப்பு

வாக்குப் பதிவு

தபால் மூல வாக்களிப்பின் இரண்டாம் நாளான, இன்று முப்படை முகாம்கள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களிலும் வாக்குகளைப் பதிவு செய்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் : தபால் மூல வாக்களிப்பிற்கான இரண்டாம் நாள் இன்று | 2Nd Day Of Postal Voting For Presidential Election

அத்துடன், நாளைய தினம் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் காரியாலயம், சிரேஷ்ட உதவி காவல்துறை அத்தியட்சகர் காரியாலயம், உதவி காவல்துறை அத்தியட்சகர் காரியாலயம், காவல்துறை நிலையங்கள், விசேட அதிரடிப்படை முகாம்கள் மற்றும் விசேட காவல்துறை பிரிவுகள் என்பனவற்றிலும் தபால் மூல வாக்குகளைப் பதிவு செய்ய முடியும்.

காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை தபால் மூலம் வாக்களிப்பு நடைபெறும் என்பதால், அதற்கான வசதிகளை பணியிடங்களில் ஏற்படுத்திக் கொடுக்குமாறும் அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர்களுக்குத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தபால் மூல வாக்குகளைக் குறித்த தினங்களில் செலுத்த முடியாதவர்களுக்கு எதிர்வரும் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகள் வாக்களிப்பதற்கான மேலதிக தினங்களாக ஒதுக்கப்பட்டுள்ளன.

ஓய்வூதியதாரர்களின் கொடுப்பனவு 70 சதவீதம் வரை அதிகரிக்கப்படும் : சஜித் உறுதி

ஓய்வூதியதாரர்களின் கொடுப்பனவு 70 சதவீதம் வரை அதிகரிக்கப்படும் : சஜித் உறுதி

காவல்துறைமா அதிபர் தெரிவிப்பு  

அவ்வாறு 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் வாக்களிப்பவர்கள் தாங்கள் கடமையாற்றும் மாவட்டங்களின் மாவட்ட செயலகங்களில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள விசேட வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்க வேண்டும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் : தபால் மூல வாக்களிப்பிற்கான இரண்டாம் நாள் இன்று | 2Nd Day Of Postal Voting For Presidential Election

இதேவேளை, அலுவலக அடையாள அட்டையைப் பயன்படுத்தி எவரேனும் வாக்களிக்கச் சென்றால், தபால் மூல வாக்களிப்பைக் கண்காணிக்கும் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியினால் நியமிக்கப்பட்ட அதிகாரி ஒருவர் குறித்த வாக்காளரின் ஆள் அடையாளத்தை உறுதி செய்வதற்கான செயற்பாடு முன்னெடுக்கப்படும்.

அவ்வாறில்லாத சந்தர்ப்பத்தில், அலுவலக அடையாள அட்டையைப் பயன்படுத்தி வாக்களிப்பதற்கான வாய்ப்பை வழங்க வேண்டாம் எனச் சகல தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கும், தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் நிலையங்கள் மற்றும் தபால் மூல வாக்குச் சீட்டுக்களை விநியோகிக்கும் நிலையங்கள் என்பவற்றுக்கு விசேட காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் நிஹால் தல்துவ (Nihal Thalduwa) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு : போக்குவரத்து சங்கங்கள் அதிரடி அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு : போக்குவரத்து சங்கங்கள் அதிரடி அறிவிப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026