சுயாதீனமாக செயற்படப்போவதாக அறிவித்த இரண்டாவது உறுப்பினரும் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டார்!
MP
SLFP
Sri Lanka Freedom Party
Suren Raghavan
State Minister.
joins the government
By Kanna
அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படுவதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுள் இரண்டாவது உறுப்பினரும் இன்று அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் இராஜாங்க அமைச்சராக சற்றுமுன்னர் பதவியேற்றுள்ளார்.
இதேவேளை, கடந்த வாரம் அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படுவதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுள் சுரேன் ராகவனும் ஒருவர்.
எவ்வாறாயினும், கல்வி சேவை மற்றும் மருசீரமைப்பு இராஜாங்க அமைச்சராக சுரேன் ராகவன் இன்று பதவியேற்றார்.
முன்னதாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சுயாதீனமாக செயற்படப்போவதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார விவசாய இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி