இலங்கைக்கு நூதன முறையில் கஞ்சாவை கடத்தவிருந்த கும்பல் கைது
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக தயார் நிலை வைக்கப்பட்டிருந்த 364 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் 3 பேர் நாகபட்டினம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் நேற்றையதினம் (18) கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நாகபட்டினம், வேட்டைக்காரனிருப்பு, நாலுவேதபதி பகுதியிலேயே 364 கிலோ கிராம் கேரளா கஞ்சாவும், பைபர் படகொன்றையும் நாகபட்டினம் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
காவல்துறையினரின் விசாரணை
இதன்போது அக்கரைப்பேட்டை, நாகபட்டினம், வேட்டைக்காரனிருப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கஞ்சாவைக் கண்ணாடி ஃபைபர் படகு மூலம் கடல் வழியாக இலங்கைக்குக் கடத்த திட்டமிட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதன்போது கைது செய்யப்பட்ட மூவர் மீதும் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் வழக்குப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் நாகபட்டினம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |