கட்டுநாயக்கவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள்!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த சிறிலங்கன் ஏர்லைன்ஸின் 3 விமானங்கள் மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்திற்கு (Mattala Rajapaksa International Airport) திருப்பி விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்டுநாயக்க பகுதியில் இன்று (19) காலை நிலவிய கடுமையான பனிமூட்டம் காரணமாக குறித்த விமானங்கள் பாதுகாப்பாக திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மும்பை, ரியாத் மற்றும் குவாங்சோவிலிருந்து வருகைதந்த 3 விமானங்களே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கடுமையான பனிமூட்டம்
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) நிலவிய கடுமையான பனிமூட்டம் பார்வைத்திறனைக் குறைத்ததால் இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு அதிகாரிகள் (Air Traffic Controllers), பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாகத் தரை இறங்குவதைத் தற்காலிகமாகத் தடை செய்ய நேரிட்டது என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
விமானம் தரையிறங்குவதற்கு பாதிப்பாக இருந்த பனிமூட்டமான நிலைமை நீங்கி தற்போது சீரான வானிலை தென்படுவதாக கூறப்படுகின்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..! 16 மணி நேரம் முன்