அடுத்த ஏழு நாட்களுக்கான மின் துண்டிப்பு விபரம் வெளியானது
மின் உற்பத்திக்கு போதிய எரிபொருள் மற்றும் நீர் இல்லாத காரணத்தினால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 3 மணிநேர மின்வெட்டை நாளை (9) தொடக்கம் எதிர்வரும் 15 ஆம் திகதி வரையான ஏழு நாட்களுக்கு நீடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இன்று (8) பிற்பகல் தெரிவித்தார்.
அதன்படி, எதிர்வரும் ஏழு நாட்களுக்கு 3 மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்படும் எனவும், 'ஏ' முதல் 'டபிள்யூ' வரையிலான 20 வலயங்களில் பகலில் 1 மணித்தியாலம் 40 நிமிடங்களும் இரவில் 2 மணித்தியாலம் 20 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படும் எனவும் ரத்நாயக்க தெரிவித்தார்.
காலை 6.00 மணி முதல் 8.30 மணி வரை கொழும்பு நகரங்களை உள்ளடக்கிய 'சிசி' பிரிவுக்கு 2 மணி 30 நிமிடங்கள் (9, 10 மற்றும் 13 ஆம் திகதிகள் தவிர), எம், என், ஓ, எக்ஸ், ஒய் மற்றும் இசட் பிரிவுகளுக்கு காலை 5.30 முதல் 8.30 வரை. 3 மணித்தியாலங்களுக்கு (9, 10 மற்றும் 13ஆம் திகதிகள் தவிர்ந்த) மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.
