இந்திய கடற்றொழிலாளர்கள் 3 பேர் கைது : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
புதிய இணைப்பு
நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 3 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெடுந்தீவு கடற்பகுதியில் வைத்து கைதான குறித்த மூவரும் கடற்படையினரால் இலங்கை கரையோர பாதுகாப்பு படையினரிடம் கையளித்திருந்த நிலையில் கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தினரிடம் பாரப்படுத்தபட்டுள்ளனர்.
இதையடுத்து அவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் முற்பகல் 11 மணியளவில் ஊகாவற்றுறை நீதவான் வாசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது ஜனவரி 7 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
மேலதிக தகவல்கள் த. பிரதீபன்
முதலாம் இணைப்பு
அத்துமீறி நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 3 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த விடயத்தை கடற்படை பேச்சாளர் புத்திக சம்பத் தெரிவித்துள்ளார்.
இன்று (28) அதிகாலை குறித்த இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
படகு பறிமுதல்
இதன்போது அவர்கள் பயணித்த படகு ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைதானவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
அவர்கள் கரைக்கு அழைத்து வரப்படும் நிலையில், அவர்களை கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் புத்திக சம்பத் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
குருதியால் நனைந்த ஈழ நாட்காட்டியில் குமாரபுரம் படுகொலையின் நினைவுகள்… 23 மணி நேரம் முன்