பகிரங்க மன்னிப்பு கோரிய ஈரான் ஜனாதிபதி
ஈரானில் விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்தாண்டு டிசம்பரில் தொடங்கிய போராட்டம், பின்னர் அந்நாட்டு ஆட்சிக்கு எதிரான போராட்டமாக மாறியது.
இதனால் அரசுக்கும் - மக்களுக்கும் இடையே கடும் மோதல்போக்கு நிலவியது. இதனால் போராட்டக்காரர்கள் மீது அரசு தாக்குதலையும் தொடுத்தது.இந்த தாக்குதலில் சுமார் 3000 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
படையினரின் ஒடுக்குமுறைக்கு எதிராக பகிரங்க மன்னிப்பு
இந்நிலையில் போராட்டங்களின்போது பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட கடுமையான ஒடுக்குமுறை மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்காக மன்னிப்புக் கோரியுள்ளார் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன்.

ஈரானின் 47-வது புரட்சி தின விழாவில் உரையாற்றிய அவர், போராட்டங்களின்போது பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தனது வருத்தத்தைத் தெரிவிப்பதாகவும், நடந்த சம்பவங்களுக்காக தாங்கள் "வெட்கப்படுவதாகவும்" குறிப்பிட்டார்.
மக்கள் முன் வெட்கப்படுகிறோம்
"நாங்கள் மக்கள் முன் வெட்கப்படுகிறோம், இச்சம்பவங்களால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவ நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்,நாங்கள் மக்களுடன் மோதலை விரும்பவில்லை." என்று தெரிவித்தார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
குருதியால் நனைந்த ஈழ நாட்காட்டியில் குமாரபுரம் படுகொலையின் நினைவுகள்… 16 மணி நேரம் முன்