யாழில் மூன்று இந்தியர்கள் அதிரடியாக கைது
யாழில் (Jaffna) சுற்றுலா வீசா மூலம் இலங்கை (Sri Lanka) வந்த இந்தியர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை தும்பளை வீதியில் சட்டவிரோத ஜோதிட நிலையம் அமைத்து இயங்கி வந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியா பெங்களூர் வாசிகள் மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், இந்த விடயத்தை தும்பளை பிரதேச கிராம அலுவர் பருத்தித்துறை நகரசபை தவிசாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
இதையடுத்து, இது குறித்து நேற்று முன் தினம் (29) பருத்தித்துறை நகர பிதா நேரில் சென்று அவதானித்து குறித்த இந்தியர்களை வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
ஜோதிட நிலையம்
இருப்பினும் நேற்று (30) ஜோதிட நிலையம் இயங்கி வந்ததை அடுத்து நகரபிதா வின்சன் டீ டக்ளஸ் போல் பருத்தித்துறை காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இந்தியப் பிரஜைகளின் கடவுச் சீட்டை பரிசோதனை செய்த போது குறித்த மூவரும் சுற்றுலா வீசாவில் நாட்டிற்குள் வந்துள்ளமை தெரியவத்துள்ளது.
இதனையடுத்து சட்டவிரோத ஜோதிட நிலையம் அமைத்து இயக்கி வந்த மூன்று இந்தியப் பிரஜைகளையும் காவல்துறையினர் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
