யாழில் மூன்று மாதங்களேயான பச்சிளம் குழந்தை உயிரிழப்பு: மரண விசாரணையில் வெளியான காரணம்
Jaffna
Nothern Province
Srilankan Tamil News
By Kathirpriya
தாய்ப்பால் அருந்திவிட்டு , ஏணையில் உறங்கிய 03 மாதங்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் யாழில் நிகழ்ந்தேறியுள்ளது.
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த கி.ஹரிகரன் எனும் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
நேற்றைய தினம் (24) ஞாயிற்றுக்கிழமையன்று குழந்தையின் தாய், தாய்ப்பால் கொடுத்து விட்டு , குழந்தையை ஏணையில் உறங்க வைத்துள்ளார்.
பால் புரையேறி
நீண்ட நேரமாகியும் குழந்தை உறங்கிக்கொண்டே இருந்ததால், சந்தேகம் அடைந்து குழந்தையை எழுப்ப முயற்சித்தபோது , குழந்தை அசைவற்று இருந்துள்ளது.
பதற்றமடைந்த பெற்றோர் குழந்தையை, சங்கானை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது , குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணையில் பால் புரையேறியதன் காரணமாகவே குழந்தை இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 1 மணி நேரம் முன்

ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
3 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்