யாழில் தொடருந்துடன் மோதுண்டு பெண்ணொருவர் பலி!
யாழ். தென்மராட்சி, சாவகச்சேரி காவல்துறை பிரிவுக்குட்பட்ட மீசாலை வடக்குப் பகுதியில் தொடருந்தில் மோதுண்டு பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற தொடரூந்தில் மோதுண்டே குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று (24) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.15 மணியளவில் மீசாலைக்கும் - புத்தூர் சந்திக்கும் இடைப்பட்ட தொடரூந்து பாதையில் இடம்பெற்றுள்ளது.
மீசாலை வடக்கைச் சேர்ந்த 67 வயதான கி.நாகேஸ்வரி என்ற வயோதிப பெண்ணே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
அதிகாலை வேளையில் விபத்து நிகழ்ந்திருப்பதால் குறித்த பெண் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை இன்றைய காலை நேர செய்தி தொகுப்பில் காண்க.