ஐவர் படுகொலை வழக்கு: பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

Pillayan Sri Lanka Politician Law and Order
By Bavan Sep 01, 2026 09:57 AM GMT
Report

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற ஐந்து கொலைக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உட்பட இருவரை எதிர்வரும் செப்டம்பர் 15 திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் இன்று (1) உத்தரவிட்டது.

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி தர்சினி அன்னாத்துரை முன்னிலையில் நடைபெற்ற விசாரணையின் போது, வழக்கின் 3ம் சந்தேக நபரான சி. சந்திரகாந்தன் (பிள்ளையான்) - முன்னிலைப்படுத்தப்படவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இந்நிலையில் அவர் தடுத்துவைக்கப்பட்டுள்ள வெலிசர சிறைச்சாலையில் காணப்படும் இணையத்தடங்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இணையவழி மற்றும் வட்ஸ்அப் ஊடாக இணைக்கமுடியவில்லையென சிறைச்சாலை அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பிள்ளையான் கைது : உச்சநீதிமன்றின் உத்தரவு

பிள்ளையான் கைது : உச்சநீதிமன்றின் உத்தரவு

நீதிமன்றில் முன்னிலை

மேலும் இந்த வழக்கு தொடர்பாக கைதுசெய்யப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள மேலும் இரண்டு சந்தேகநபர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐவர் படுகொலை வழக்கு: பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் | 3 People Including Pillayan Remanded Until Sep 15

இன்றைய தினம் குற்றப்புலனாய்வுப் திணைக்கள அதிகாரிகளினால் குறித்த வழக்கு தொடர்பான தொடர்ச்சியான மேலதிக அறிக்கை மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. 

2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

இவ்வழக்கு கடந்த ஜூன் 15ஆம் திகதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இவ்வழக்கில் மூன்றாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள சந்திரகாந்தன், ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில் அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து விளக்கமறியில் வழங்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தகவலின்படி, 2008ஆம் ஆண்டு டி-56 ரக துப்பாக்கிகள் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் கொலைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பிள்ளையானை சிறையில் இரகசியமாக சந்தித்த இரு பெண்கள்! CID அறிக்கையில் வெளிவரும் மர்மங்கள்

பிள்ளையானை சிறையில் இரகசியமாக சந்தித்த இரு பெண்கள்! CID அறிக்கையில் வெளிவரும் மர்மங்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016