பிள்ளையான் கைது : உச்சநீதிமன்றின் உத்தரவு
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், எந்தவொரு நியாயமான காரணமும் இல்லாமல் குற்றப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை இந்த மாதம் 18 ஆம் திதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு இன்று (09) உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது, சமர்ப்பிப்புகளை பரிசீலித்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, அதை 18 ஆம் திகதி விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.
கைது செய்து தடுத்து வைத்திருப்பது சட்டவிரோதமானது
குற்றப் புலனாய்வுத் துறை பணிப்பாளர், காவல்துறை மா அதிபர், சட்டமா அதிபர் மற்றும் பலர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

எந்தவொரு நியாயமான காரணமும் இல்லாமல் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்து தடுத்து வைத்திருப்பது சட்டவிரோதமானது என்றும், தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் தீர்ப்பளிக்க கோரி மனுதாரர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |