முன்னாள் எம்.பி சஜின் வாஸ் குணவர்தன கைது
Parliament of Sri Lanka
Sajin de Vass Gunawardena
Bribery Commission Sri Lanka
By Sathangani
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன (Sajin Vass Gunawardena) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் 243.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத சொத்துக்களை ஈட்டியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் அவர் இன்று (09) இவ்வாறு கைதாகியுள்ளார்.
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று காலை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் அவர் முன்னிலையானார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு
சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய, வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் இன்று காலை குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.

இந்நிலையில் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அவரை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி