மே மாதத்தில் உருவாகும் இரட்டை ராஜயோகம்... அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்!
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரகங்களின் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.
அந்தவகையில் எதிர்வரும் மே மாதம் 10ஆம் திககி மாலை 06:39 மணிக்கு புதன் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகின்றார்.
இந்நிலையில் மேஷ ராசியில் ஏற்கனவே சுக்கிரன் இருப்பதால் புதனும், சுக்கிரனும் இணைவதால் உருவாகும் லக்ஷ்மி நாராயண யோகம் கேந்திர திரிகோண ராஜயோகத்தை உருவாக்கும் தன்மை காணப்படுகின்றது.
இந்த இரட்டை ராஜயோகம் குறிப்பிட்ட சில ராசிகளுக்கும் அதிர்ஷ்டத்தை கொடுக்கப்போகின்றது, அப்படி பணமழையில் நனையப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷ ராசி
மேஷ ராசியினருக்கு குறித்த ராஜயோகம் எல்லா வகையிலும் வெற்றியை கொடுக்கும், பல வழிகளிலும் பணம் கிடைக்கும் தன்மை உருவாகும்.
தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும், சுக்கிரன் மற்றும் புதனின் முழுமையான ஆசீர்வாதத்தால் முன்னேற்றத்திற்கான அனைத்து வழிகளும் திறக்கப்படும்.
சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கி வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.
மிதுன ராசி
இந்த இரட்டை ராஜயோகம் மிதுன ராசியினருக்கு இதுவரை வாழ்வில் இருந்துவந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுக்கும்.
வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகளும் வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். பணபுழக்கம் அதிகரிக்கப்படுவதுடன் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
துலாம் ராசி
இந்த ராஜயோகம் திருமண யோகத்தை கொடுக்கும். இந்த காலப்பகுதியில் திருமணம் ஆகாதவர்களுக்கு வரன்கள் கூடிவரும்.
தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் உண்டாகும். நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு உண்டாகும். சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்பு காணப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |