மூதூர் படகு விபத்து நிகழ்ந்து இன்றோடு 30 ஆண்டுகள் ஆகிறது
காலத்தின் பிறழ்வில் மனிதப்பிறப்பு என்பது மரணத்தோடு நிறைவுபெற்றுவிடுகிறது . ஆனால் இந்த மரணம் எப்படி நிகழ்கிறது எனும்போது சிலர் பிறந்து வாழ்ந்து வயோதிபத்தை அடைந்து மரணித்துவிடுகின்றனர் என்றபோதிலும் ஒரு சிலரின் மரணம் வாழ்தலின் இடைநடுவே இடம்பெறுவது மிகப்பெரிய துன்பியலாகும் .
அப்படியான அகாலமரணங்கள் இடையிடையே நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது . அப்படியாக 59 இற்கும் அதிகமான உயிர்களை கடல் பலிகொள்ளக் காரணமான மூதூர் படகு விபத்து நிகழ்ந்து இன்றோடு 30 ஆண்டுகள் ஆகிறது.
கடந்த 1993 ஆம் வருடம் ஜனவரி 25 ஆம் திகதி திருகோணமலை மற்றும் மூதூர் பகுதிகளுக்கிடையிலான பிரதான போக்குவரத்து மார்க்கமாக விளங்கிய கடல்வழிப் பாதையில் பயணித்த படகு கொட்டியாரக்குடா கடலில் பாதாளமலைக்கு அருகாமையில் ஏற்பட்ட நீரோட்டத்தில் சிக்கி கவிழ்ந்து போனதில் குறித்த துன்பியல் பதிவாகியது.
அன்றைய படகு விபத்தில் உயிர் துறந்த அத்தனை உறவுகளையும் இன்றைய நாளில், ஈழத் தமிழர்களின் வரலாற்று வலிகளை பதிவு செய்யும் வகையில் ஐபிசி தமிழ் நினைவேந்துகிறது.
இன்றோடு 30 ஆண்டுகள்