300 காவல்துறை அதிகாரிகள் இடைநீக்கம் : பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட தகவல்
2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் தற்போது வரையான காலப்பகுதியில் 300 காவல்துறை அதிகாரிகள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் செயல்பாட்டு உதவியாளர் பதவிக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 50 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (31.07.2025) நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
காவல்துறை அதிகாரிகள் இடைநீக்கம்
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், "ஜனவரி முதல், 300 காவல்துறை அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு, 200 பேர் ஆண்டு முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு கடமை உணர்வு இல்லாததால் இதுபோன்ற இடைநீக்கங்கள் செய்யப்படுகின்றன.
சிலர் 25 ஆண்டுகள் பணியாற்றியுள்ளனர். இறுதியாக, அவர்கள் ஓய்வூதியத்தை இழந்து சிறையில் உள்ளனர். குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு ஜெனரல் சிறையில் உள்ளார்.
மேலும் ஐஜிபி பிணையில் உள்ளார். விசாரணைகள் நடந்து வருவதுடன் சட்டம் அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் செயல்படுத்தப்படுகிறது." என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் திருவிழா
