அதி அபாய பகுதிகளில் 300 க்கும் மேற்பட்ட பாடசாலைகள்...! வெளியான தகவல்
மண்சரிவு அதி அபாய பகுதிகளில் 300 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் காணப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அத்துடன் அடையாளம் காணப்பட்டுள்ள குறித்த பாடசாலைகள் அமைந்துள்ள பகுதியில் அனர்த்தங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தகவலை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் மண்சரிவு ஆய்வு பிரிவின் பணிப்பாளர் காமினி ஜயதிஸ்ஸ (Gamini Jayatissa) தெரிவித்துள்ளார்.
மண்சரிவு அதி அபாய இடங்கள்
அத்துடன், மண்சரிவு அதி அபாய பகுதிகளில் பல்வேறு அரச நிறுவனங்களும் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் சுமார் 14,000 குடும்பங்கள் வாழ்ந்து வருவதாகவும் அதில் 2600 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2500 க்கும் மேற்பட்ட குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, பதுளை, இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவான பிரதேசங்கள் மண்சரிவு அதி அபாய இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பணிப்பாளர் காமினி ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |