பாடசாலைகளில் 30 ஆயிரம் ஆசிரியர்கள் பற்றாக்குறை - இலங்கை ஆசிரியர் சங்கம்!
Ceylon Teachers Service Union
Sri Lankan Schools
By Pakirathan
இலங்கையில் உள்ள பாடசாலைகளில் சுமார் 30,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்றையதினம் (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் குறித்த விடயத்தை கூறியுள்ளார்.
கல்வியியற் கல்லூரிகளில் பயிற்றப்பட்ட சுமார் 8,000 பேர் வெளியேறியிருந்தாலும், அவர்களை முறையாக பாடசாலைகளுக்கு நியமிப்பதற்குரிய சரியான திட்டம் கல்வி அமைச்சிடம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி