நைஜீரியாவில் நடந்த கோரத் தாக்குதல் : 37 பேர் பலி!
நைஜீரியாவில் கிராமத்துக்குள் புகுந்த பயங்கரவாதிகள் திடீரென நடத்திய தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
நைஜீரிய அரசுக்கு எதிராக போகோஹராம் இயக்கம் அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகின்றன, அதனைப் பின்பற்றி பல்வேறு ஆயுதக் குழுக்களும் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள கெய்டாம் மாவட்டத்தின் குரோகயேயா கிராமத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 17 பேர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.
இறுதி ஊர்வலத்தின் போது
இந்த தாக்குதலின் போது உயிரிழந்தவர்களுக்கான இறுதி ஊர்வலத்தின் போது மீண்டும் பயங்கரவாதிகளின் கண்ணிவெடித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இந்த கண்ணிவெடித்தாக்குதலின் போது மேலும் சுமார் 20 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதலையடுத்து நைஜீரிய அரசு அவசர பாதுகாப்பு கூட்டத்தைக் கூட்டி, தாக்குதல் நடந்த பகுதிக்கு அதிகாரிகளை அனுப்பி கண்காணிப்பினை மேற்கொண்டு வருகிறது.
நைஜீரியாவின் வடகிழக்கு, வடமேற்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் அடிக்கடி இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 6 மணி நேரம் முன்