மூதூரில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்
Sri Lankan Tamils
Sri Lankan Peoples
By Dilakshan
தியாக தீபம் திலீபனின் 38வது ஆண்டு நினைவுதின நினைவேந்தல் நிகழ்வு மூதூர் -சேனையூர் வீரபத்திரன் கோயில் முன்றலில் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) மாலை இடம்பெற்றது.
நினைவேந்தல் நிகழ்வை சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்ல நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு ஏற்பாடு செய்திருந்தது.
மலர்தூவி நினைவஞ்சலி
இதன்போது, பொதுச்சுடர் ஏற்றப்பட்டு தியாகத் தீபம் திலீபனின் திரு உருவப்படத்துக்கு மலர்தூவி ஒரு நிமிட நினைவஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இதில் பொதுமக்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு, நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு உறுப்பினர் பண்பரசன் கருத்து தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்