மிகுதி படுத்தப்படும் கோடிக்கணக்கான ரூபாய்கள்: அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
Sri Lankan Peoples
Bimal Rathnayake
NPP Government
By Dilakshan
அமைச்சர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்படாததால், பல திட்டங்கள் கோடிக்கணக்கான ரூபாய்களை மிகுதி படுத்தப்படுவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் திருடுவதில்லை என்றும் பல்லன் ஓயா பாலத்தால் மட்டும் இரண்டு கோடி ரூபாய் மிச்சப்படுத்தப்பட்டதாக அமைச்சர் கூறியுள்ளார்.
ஒப்பந்ததாரக்கு சுதந்திரம்
அத்துடன், அமைச்சர்கள் பணம் கேட்டு தேடி வருவதில்லை என்பதால், ஒப்பந்ததாரர்கள் சுதந்திரமாக வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மொனராகலையில் பல்லன் ஓயாவின் மீது அமைக்கப்பட்டுள்ள இரும்புப் பாலத்திற்குப் பதிலாக புதிய பாலம் கட்டும் பணிகளைத் தொடங்கி வைக்கும் நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்தப் பாலம் அடுத்த ஆண்டு டிசம்பரில் பொதுமக்களுக்குத் திறக்க திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்