இலங்கை காவல்துறை திணைக்களத்தில் அதிகரிக்கும் வெற்றிடங்கள்...! வெளியான தகவல்

Sri Lanka Police Sri Lanka Sri Lanka Police Investigation
By Shalini Balachandran Aug 19, 2026 12:58 AM GMT
Report

காவல்துறை திணைக்களத்தில் 2020 ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டின் ஜூன் 24 ஆம் திகதி வரையிலான சுமார் 7 ஆண்டுகளில் 4,308 காவல்துறையினர் சேவையிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை தலைமையகம் இதனை தெரிவித்துள்ளது.

இவ்வாறு 3,936 ஆண் காவல்துறையினரும் 372 பெண் காவல்துறையினரும் பதவியில் இருந்து விலகியுள்ளதாக தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச மாநாடு...! அனைத்துத் தரப்பினருக்கும் அவசர அழைப்பு

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச மாநாடு...! அனைத்துத் தரப்பினருக்கும் அவசர அழைப்பு

பெண் அதிகாரிகள்

இவர்களில் அதிகமானோர் கடந்த 2025 ஆம் ஆண்டிலேயே விலகியுள்ளனர்.

அந்த ஆண்டில் மட்டும் 838 ஆண் அதிகாரிகளும் 49 பெண் அதிகாரிகளுமாக மொத்தம் 887 பேர் சேவையிலிருந்து விலகியுள்ளனர்.

இலங்கை காவல்துறை திணைக்களத்தில் அதிகரிக்கும் வெற்றிடங்கள்...! வெளியான தகவல் | 4 308 Police Officers Leave Service In Sl

இந்த ஆண்டின் முதல் 6 மாத காலத்தில் 699 ஆண் அதிகாரிகளும் 59 பெண் அதிகாரிகளுமாக மொத்தம் 758 அதிகாரிகள் விலகியுள்ளனர்.

தமது சேவைக்காலம் நிறைவடைவதற்கு முன்னர் ஓய்வு பெறுதல், வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகச் செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு தனிப்பட்ட காரணங்கள் இதில் பங்களித்துள்ளன.

இது தவிர, கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் -ஒழுக்காற்று நடவடிக்கை காரணமாக 658 அதிகாரிகளைச் சேவையிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்குப் படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்!

இலங்கைக்குப் படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்!

காவல்துறை அதிகாரிகள்

தற்போது இலங்கை காவல்துறை சேவையில் மொத்தம் 30,815 வெற்றிடங்கள் நிலவுகின்றன.

இதில் சாதாரண காவல்துறை சேவையில் 28,164 வெற்றிடங்களும், விசேட அதிரடிப்படையில் (STF) 2,651 வெற்றிடங்களும் அடங்கும்.

இலங்கை காவல்துறை திணைக்களத்தில் அதிகரிக்கும் வெற்றிடங்கள்...! வெளியான தகவல் | 4 308 Police Officers Leave Service In Sl

வழக்கமான ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு மற்றும் இடமாற்ற நடைமுறைகளுக்கு அமைவாக இந்தக்வெற்றிடங்களை விரைவாக நிரப்புவதற்காக புதிய ஆட்சேர்ப்புகள் மற்றும் பதவி உயர்வுகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், காவல்துறை அதிகாரிகளின் சேவையை மேம்படுத்துவதற்கான மனவலிமையை உயர்த்துவதற்கும் காவல் திணைக்களம் பல வேலைத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது.

நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதல், டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்கள், விடுதி வசதிகளை மேம்படுத்துதல், தொற்றா நோய்களைக் கண்டறிவதற்கான மருத்துவ முகாம்கள் மற்றும் தரமான மருந்துகளை வழங்குதல் ஆகியவை இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்கள்...! வெடிக்கவுள்ள போராட்டம்

இலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்கள்...! வெடிக்கவுள்ள போராட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022