மின்சார கார் தீப்பிடித்ததில் குழந்தைகள் உட்பட 4 பேர் பலி: கண் இமைக்கும் நேரத்தில் கோர விபத்து
மின்சார வாகனம் ஒன்று சாலைத் தடுப்பில் மோதி பயங்கரமாகத் தீப்பிடித்து எரிந்த விபத்தில், 3 வயதுக் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த கோர விபத்து ஆந்திரப் பிரதேச மாநிலம் என்.டி.ஆர் மாவட்டம், விஜயவாடா மேற்கு புறவழிச்சாலையில் இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
என்.டி.ஆர் மாவட்டத்தைச் சேர்ந்த கொம்மரெட்டி ராம்தேவ் (39)இ இவரது தாயார் அருணாஇ திகுரு விஜயா மற்றும் 3 வயதுக் குழந்தை உள்ளிட்டோரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
தடுப்புச் சுவரில் பயங்கரமாக மோதி
விஜயவாடா மேற்கு புறவழிச்சாலையில் வாகனம் அதிவேகமாகப் பயணித்துக் கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் பயங்கரமாக மோதியுள்ளது.
Four people, among them a 3-year-old boy, died when their car hit a roadside wall and caught fire on the West bypass road on the outskirts of Vijayawada on Monday night. They were returning from a function at Namburu. A woman who was pulled out is critical. Video: @hindugnr1 https://t.co/oAQwteeWss
— The Hindu - Andhra Pradesh (@THAndhra) October 12, 2026
சாலையின் தடுப்பில் கார் மோதிய அடுத்த கணமே, மின்சார காரின் பேட்டரி பகுதியில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு காரணமாக கார் முழுவதும் தீப்பற்றி எரியத் தொடங்கியது.
தீ காரின் உள்ளே அதிவேகமாகப் பரவியதால், காருக்குள் சிக்கியவர்களால் உடனடியாக வெளியேற முடியாமல் போனது.
தொழில்நுட்பக் கோளாறுகள்
இவ்விபத்தில் கொம்மரெட்டி ராம்தேவ், அவரது தாயார் அருணா, திகுரு விஜயா மற்றும் 3 வயதுக் குழந்தை ஆகிய நால்வரும் காருக்குள்ளேயே சிக்கித் உடல் கருகிப் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இவர்களுடன் காரில் பயணித்த மற்றொரு பெண் பலத்த காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்டு, தற்போது ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் தீயைக் கட்டுப்படுத்திக் காயமடைந்தவரை மீட்டுள்ளனர்.
மேலும், விபத்து ஏற்படுவதற்கான காரணம் என்ன மற்றும் மின்சார காரின் பேட்டரியில் திடீரெனத் தீப்பிடிப்பதற்கான தொழில்நுட்பக் கோளாறுகள் (Technical Flaws) எவையேனும் உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |