யாழில் இரு குழுக்களுக்கிடையில் கடும் மோதல் - போராடி கட்டுப்படுத்த்திய காவல்துறை
யாழில் இரு குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில் சிலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் சிலர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
யாழ்ப்பாணம் - பண்டத்தரிப்பு, பிரான்பற்று பகுதியில் நேற்றிரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விசாரணை
பிரான்பற்று மற்றும் நிற்சாமம் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கு இடையே இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற இளவாலை காவல்துறையினர் மற்றும் விசேட குழுவினர் பெரும் முயற்சியின் பின்னர் மோதலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மோதலில் காயமடைந்த சிலர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பில் சிலரைப் காவல்துறையினர் கைது செய்துள்ளதுடன், அவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |