கனடாவில் மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம் : வீடொன்றிலிருந்து நான்கு சடலங்கள் மீட்பு
Canada
By Sumithiran
கனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்தனர்.
கனடாவின், சஸ்கற்றுவானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(24) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தகவல் கிடைத்து அதிகாரிகள் சென்று பார்த்தவேளை நால்வர் இறந்து கிடந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.
ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்
இவர்களில் இருவர் பெற்றோர் எனவும் மற்றைய இருவர் பிள்ளைகள் எனவும் தெரியவருகிறது.
உடல்கள் ரெஜினாவுக்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர், அங்கு பிரேத பரிசோதனைகள் இந்த வார இறுதியில் திட்டமிடப்பட்டுள்ளன.
பொதுமக்களுக்கு ஆபத்தில்லை
இந்த சடலங்கள் மீட்கப்பட்டமையால் பொதுமக்களுக்கு எந்தவிதமான ஆபத்தும் இருப்பதாக தாங்கள் நம்பவில்லை என்றும், அவ்வாறு தெரியவந்தால் பொது எச்சரிக்கையை வெளியிடுவோம் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 3 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி