கனடாவில் 4 பேர் மீது காரை ஏற்றித் தள்ளிய இளைஞன் - விடுக்கப்பட்ட எச்சரிக்கை
கனடாவில் (Canada) நான்கு பேர் மீது காரை ஏற்றி காயப்படுத்திய நபரை காவல்தறையினர் தீவிரமாக தேடி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள செய்தி வெளியிடுள்ளன.
குறித்த விபத்து சம்பவம் டொராண்டோ (Toronto) நகரப் பல்கலைக்கழகத்தில் (TMU) செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
23 வயதுடைய ரியான் பெட்ரோஃப் (Ryan Petroff) என்ற இளைஞனை டொராண்டோ காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
காவல்துறையில் சரணடைய உத்தரவு
குறித்த நபர் ஒரு வாகனத்தை வேண்டுமென்றே ஒரு குறிப்பிட்ட நபரை நோக்கி ஓட்டிச் சென்று தாக்கியதாகவும் ஆனால் எதிர்பாராத விதமாக நான்கு பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
காவல்துறையினரால் தேடப்படும் ரியான் பெட்ரோஃப் உடனடியாக காவல்துறையில் சரணடையுமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
ஊடகங்களுக்கு பேசிய டொராண்டோ காவல்துறை ஆய்வாளர் எர்ரோல் வாட்சன், பெட்ரோஃப் ஒரு குறிப்பிட்ட நபரை இலக்கு வைத்ததாக காவல்துறையினர் நம்புவதாகக் தெரிவித்தார்.
இருப்பினும், சந்தேக நபருக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் இடையிலான உறவு குறித்து மேலும் விவரங்களை அவர் வெளியிட மறுத்துவிட்டார்.
காவல்துறையினருக்குத் தகவல்
பெட்ரோஃபை அடையாளம் காண உதவும் வகையில் அவரது புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
பொதுமக்கள் பெட்ரோஃபை ஆபத்தானவராக கருத வேண்டும் என்றும் அவரை யாராவது பார்த்தால் உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் ஆய்வாளர் வாட்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
