வரலாற்றில் முதன்முறையாக - நாட்டில் நடந்த பாரிய மோசடி: 4 தனியார் வங்கி முகாமையாளர்களுக்கு விளக்கமறியல்

CID - Sri Lanka Police Crime Court of Appeal of Sri Lanka Sri Lanka Banks
By Thulsi Aug 18, 2026 02:00 AM GMT
Report

சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை 'உண்டியல்' முறை மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, நாட்டின் பிரதான 4 தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள் நால்வரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று (17) பிற்பகல் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து வரும் ஓகஸ்ட் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாட்டிற்கு எந்தவொரு பொருளையும் இறக்குமதி செய்யாமல், சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு அனுப்பிய சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, இந்த சந்தேகநபர்கள் இன்று அந்தந்த வங்கிகளுக்குள்ளேயே வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 

மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை...!

மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை...!

சட்டவிரோதப் பணப் பரிமாற்றம்

இவ்வாறானதொரு கைது நடவடிக்கை வரலாற்றில் முதன்முறையாக இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

வரலாற்றில் முதன்முறையாக - நாட்டில் நடந்த பாரிய மோசடி: 4 தனியார் வங்கி முகாமையாளர்களுக்கு விளக்கமறியல் | 4 Private Bank Managers Remanded Over Alleged Usd

இந்தச் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி, ஜெப்ரி மொஹமட் எனப்படும் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதற்கமையவே, குறித்த சந்தேகநபர்களான நான்கு வங்கி முகாமையாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேகநபர் இந்த நான்கு அதிகாரிகளுக்கும் வாராந்தம் பணம் வழங்கி வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன்படி, ஒருவருக்கு வாரத்திற்கு 30,000, 50,000 மற்றும் ஒரு இலட்சம் ரூபா வீதம் பணம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட நான்கு வங்கி முகாமையாளர்களில் ஒருவருக்கு ஒரு சந்தர்ப்பத்தில் சுமார் 10 இலட்சம் ரூபா பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, வங்கி நிதி மோசடிகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ஜெப்ரி மொஹமட் என்பவரின் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

குறித்த சந்தேகநபர் நாட்டிற்குப் பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி சுமார் 36 நிறுவனங்களை நிறுவியுள்ளதாகவும், அவற்றுக்கு வங்கிக் கணக்குகளைத் திறப்பதற்காக குறித்த 4 தனியார் வங்கிகளுக்குச் சென்றுள்ளதாகவும் அதிகாரி நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.

அவ்வாறு பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி நாட்டிலிருந்து பணம் வெளியேறிய போதிலும், நாட்டிற்கு அத்தகைய பொருட்கள் எதுவும் இறக்குமதி செய்யப்படவில்லை என்றும் அதிகாரி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இன்றுமுதல் மூடப்படவுள்ள மதுபானசாலைகள்...! வெளியான அறிவிப்பு

இன்றுமுதல் மூடப்படவுள்ள மதுபானசாலைகள்...! வெளியான அறிவிப்பு

விசாரணைகள்

மேலும், இன்று கைது செய்யப்பட்ட நான்கு வங்கி அதிகாரிகளும் குறித்த சந்தேகநபரை நேரில் சந்தித்து வங்கி நடவடிக்கைகளைச் செய்து கொடுத்துள்ளதுடன், ஏறக்குறைய ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இவ்வாறான சந்திப்புகள் இடம்பெற்றுள்ளதாக அவர் கூறினார்.

வரலாற்றில் முதன்முறையாக - நாட்டில் நடந்த பாரிய மோசடி: 4 தனியார் வங்கி முகாமையாளர்களுக்கு விளக்கமறியல் | 4 Private Bank Managers Remanded Over Alleged Usd

வங்கி அதிகாரிகள் என்ற ரீதியில் நிறுவனமொன்றின் கணக்குகளைத் திறக்கும் போது, அந்நிறுவனங்கள் பதிவுசெய்யப்பட்டவையா எனச் சரிபார்க்க வேண்டியிருந்த போதிலும், அதைச் செய்யாமல் இந்த அதிகாரிகள் குற்ற எண்ணத்துடன் கணக்குகளைத் திறக்க ஒத்தாசையாக இருந்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், நாட்டிலிருந்து வெளியேறிய பணத்தில் 6.5 மில்லியன் ரூபா பணம் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் கைகளுக்குச் சென்றுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

சந்தேகநபர்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதால், அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர். 

 

சிறையில் வைத்தாவது நாமலை ஜனாதிபதியாக்குவோம்...! அநுர அரசாங்கத்திற்கு அதிரடி எச்சரிக்கை

சிறையில் வைத்தாவது நாமலை ஜனாதிபதியாக்குவோம்...! அநுர அரசாங்கத்திற்கு அதிரடி எச்சரிக்கை


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026