ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு..! இலங்கையர் நான்கு பேர் இந்தியாவில் கைது
இலங்கையைச் (srilanka) சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு உடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 4 பேர் இந்தியாவில் (india) கைது செய்யப்பட்டுள்ள இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவர்களை இந்திய - குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் (sardar vallabhbhai patel airport) வைத்து குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
அவர்கள் இலங்கையில் இருந்து சென்னை (chennai) வழியாக அகமதாபாத் சென்றதாக தெரியவந்துள்ளது.
முதல் கட்ட விசாரணைகள்
இந்தநிலையில் அவர்கள் அகமதாபாத்திற்கு வந்த நோக்கத்தை கண்டறியும் வகையில் முதல் கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் நால்வரிடமும் நீண்ட நேரம் விசாரணை நடத்தப்படும் என அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், திட்டமிட்ட இலக்கை அடைவதற்கு முன்பே குஜராத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்று குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் சந்தேகநபர்கள் பாகிஸ்தானில் (pakistan ) உள்ள தங்களின் உத்தரவுக்காக காத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |