யாழ்ப்பாணத்தில் பலரதும் கவனத்தை ஈர்த்த மூதாட்டியின் ஓட்டம்
Jaffna
By Vanan
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலைகளில் ஒன்றான சுழிபுரம் விக்ரோறியா கல்லூரியில் கடந்த 03 ஆம் திகதி இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் திருமதி.எஸ். சிவகுமார் தலைமையில் இடம்பெற்ற வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டியில் மாணவர்களின் பல்வேறு போட்டி நிகழ்வுகளும் இடம்பெற்றன.
சிறப்பு பரிசு

குறித்த விளையாட்டு போட்டியில் பழைய மாணவர்களிற்கான 400 m ஓட்ட நிகழ்வு இடம்பெற்றது.
அந்த ஓட்டப்போட்டி நிகழ்வில் அப்பாடசாலையின் பழைய மாணவிகள் பலர் பங்குபற்றி இருந்தனர்
குறித்த பாடசாலையில் கல்விகற்ற 75 வயதுடைய புனிதவதி என்ற மூதாட்டி ஒருவர் கலந்து கொண்டு சிறப்பு பரிசினை தட்டிச் சென்றுள்ளார்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி