உலகிலுள்ள 127 புற்றுநோய்களில் 41 வகையானவை இலங்கையில் பதிவு
உலக சுகாதார ஸ்தாபனத்தின் புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சிக்கான சர்வதேச நிறுவனம் (IAA) உடலுக்கு ஆபத்து விளைவிக்கும் 127 வகையான புற்றுநோய்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவற்றில் சுமார் 41 நோய்கள் இலங்கையில் இருப்பதாகவும் தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு பிரச்சாரத்தின் வைத்தியர் ஹசரேலி பெர்னாண்டோ தெரிவித்தார்.
புற்றுநோய் என்பது ஒரு காரணியால் ஏற்படும் நோயல்ல, பல காரணங்களால் ஏற்படும் நோய், ஆனால் அது குறித்த ஆராய்ச்சியின் மூலம் கண்டறியப்பட்ட 127 புற்றுநோய்களை உலக சுகாதார அமைப்பின் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் (AIA) வெளியிட்டுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
பெப்ரவரி 4ஆம் திகதி உலக புற்றுநோய் தினத்திற்காக சுகாதார மேம்பாட்டு பணியகம் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் விசேட வைத்திய நிபுணர் ஹசரெலி பெர்னாண்டோ இவ்வாறு தெரிவித்தார்.
ஆண்களுக்கு வாய்ப் புற்றுநோய்
தற்போது கண்டுபிடிக்கப்பட்ட புற்றுநோய்களில், இலங்கையில் அறிமுகப்படுத்திய புற்றுநோய்கள் பற்றிய தகவல்கள் தற்போது அச்சிடப்பட்டுள்ள ‘Abundant Carcinogens in Sri Lanka’ என்ற புத்தகத்தின் ஊடாகவும், தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு இணையத்தளமான www.nccp.health.gov.lk மூலமாகவும் கிடைக்கப்பெறுவதாக அவர் கூறினார்.
இதேவேளை இலங்கையில் முக்கியமாக ஆண்களும் பெண்களும் 10 வகையான புற்றுநோய்களை எதிர்கொள்வதாக சுகாதார அமைச்சின் தேசிய புற்றுநோய் பிரச்சாரத்தின் சமூக சுகாதார வைத்தியர் சுராஜ் பெரேரா தெரிவித்தார்.
ஆண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் 13 சதவீதம் வாய்ப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், மூன்றாவது பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய், நான்காவது உணவுக்குழாய் புற்றுநோய் மற்றும் ஐந்தாவது புரோஸ்டேட் புற்றுநோய் என்று அவர் சுட்டிக்காட்டினார் .
பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய்
அவற்றில், முதல் நான்கு புற்றுநோய்கள் தடுக்கக்கூடியவை, முன்கூட்டியே கண்டறியக்கூடியவை மற்றும் புகையிலை தொடர்பான புற்றுநோய்களாக தடுக்கக்கூடியவை என்று வைத்தியர் கூறினார்.
பெண்களிடையே பதிவாகும் புற்றுநோய்களில் 27 சதவீதம் மார்பகப் புற்றுநோய் என்றும், தைரொய்டு தொடர்பான புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஆகியவை பெண்களிடையே பொதுவாகப் பதிவாகும் மற்றைய புற்றுநோய்கள் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் ஆண், பெண் இருபாலருக்கும் ஏற்படும் புற்றுநோய்களில் பெருங்குடல் புற்றுநோய் மூன்றாவது இடத்தில் இருப்பதாகவும், அதிலிருந்து விடுபட, நமது வாழ்க்கை முறையிலும், உணவு முறையிலும் மாற்றங்களைச் செய்வது அவசியம் என வலியுறுத்தினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |