உணவை ஓடர் செய்தால் 43 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய அதிசயம்
உங்களுக்கு பிடித்த உணவை ஓடர் செய்த பின்னர் எவ்வளவு நேரம் காத்திருக்கலாம். நீங்கள் ஓடர் செய்த உணவுப் பொருளுக்காக 43 ஆண்டுகள் காத்திருக்க முடியுமா இல்லை என்பதே பதில். 30 நிமிடம் தாண்டிய பிறகு அமைதியின்மை ஏற்படுவது எல்லோருக்கும் பொதுவானது.
ஆனால் மேற்கு ஜப்பானில் உள்ள இறைச்சிக் கடையான அசாஹியாவில் உள்ள மெனுவில் உறைந்த கோபி மாட்டிறைச்சி குரோக்கெட்டுகளை (ஒருவருக்குப் போதுமானது) ஓடர் செய்தால், உங்கள் ஓடரைப் பெற 43 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
விலையில்லா கோபி மாட்டிறைச்சி
விலையில்லா கோபி மாட்டிறைச்சி குரோக்கெட்டுகள் ஜப்பானில் மிகவும் பிடித்தமான உணவாகும்.
1926ல் திறக்கப்பட்ட இந்த கடை வாடிக்கையாளர்களுக்கு உயர்தர மாட்டிறைச்சியை வழங்குவதில் பிரபலமானது.
இணையத்தில் பிரபலமானது
2000 ஆம் ஆண்டில், உறைந்த கோபி மாட்டிறைச்சி குரோக்கெட்டுகள் இணையத்தில் பிரபலமானது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன், அந்த உணவுப் பொருளுக்கான காத்திருப்பு காலம் முப்பது ஆண்டுகளாக இருந்தது, தற்போது அது 43 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |