பற்றி எரிந்த யாழ். பொது நூலகம் - வரலாற்றுக் கொடுமை அரங்கேறி 44 ஆண்டுகள்

Sri Lankan Tamils Jaffna Jaffna Public Library
By Thulsi Jun 01, 2025 07:58 AM GMT
Report

யாழ். பொது நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டு 44 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

யாழ்ப்பாண நூலகத்தில் (Jaffna Public Library) மாநகர சபையின் ஏற்பாட்டில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில் மாநகர சபை ஆணையாளர் பொது நூலக நூலகர், நூலக உத்தியோகஸ்தர்கள், வாசகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

நூலக எரிப்பு சம்பவத்தினை நாம் எமது அடுத்த சந்ததியினருக்கும் எடுத்து செல்ல வேண்டும். அந்த பணிகளை ஊடகங்களே செய்ய வேண்டும் என நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

யாழ். திரும்பிய 74 வயது அகதியின் கைது - சாடும் பிமல் ரத்நாயக்க

யாழ். திரும்பிய 74 வயது அகதியின் கைது - சாடும் பிமல் ரத்நாயக்க

வன்முறைத் தீ கொழுந்துவிட்டு எரிந்தது

இன்றைய நினைவு தினம் தொடர்பில் ஊடகங்களில் கட்டுரைகள், செய்திகள் என்பன வெளிவராதமை கவலைக்கு உரியது என நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் கவலை தெரிவித்தனர்.

பற்றி எரிந்த யாழ். பொது நூலகம் - வரலாற்றுக் கொடுமை அரங்கேறி 44 ஆண்டுகள் | 44Th Remembrance Of Burning Jaffna Public Library

1981 மே 31 அன்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் நடந்துகொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது.

அன்றிரவு யாழ்ப்பாணத்தின் பிரபல வணிக நிறுவனங்கள், கடைகள் என அனைத்தும் தீயிட்டு கொளுத்தப்பட்டன. அன்று கொளுத்தப்பட்ட வன்முறைத் தீ மறுநாளும் கொழுந்துவிட்டு எரிந்தது

ஜூன் முதலாம் திகதியும் இரவு யாழ்ப்பாணத்திலிருந்த கடைகள் பலவும் தீயிட்டு கொளுத்தப்பட்டன. அன்று முழுவதும் நிலவிய பதற்றச் சூழலை இந்தச் சம்பவம் மேலும் தீவிரப்படுத்தியது.

சர்ச்சையில் ஆசிரியர் இடமாற்றம் - கண்ணீர் சிந்தும் ஆசிரியைகள் - அதிகார மமதையில் அதிகாரிகள்

சர்ச்சையில் ஆசிரியர் இடமாற்றம் - கண்ணீர் சிந்தும் ஆசிரியைகள் - அதிகார மமதையில் அதிகாரிகள்

வரலாற்றுக் கொடுமை

அதைத் தொடர்ந்துதான் அந்த வரலாற்றுக் கொடுமை அரங்கேறியது. சிங்களப் பேரினவாத கும்பல் ஒன்று யாழ்ப்பாண பொதுசன நூலகத்தைத் திட்டமிட்டு கொளுத்தியது.

பற்றி எரிந்த யாழ். பொது நூலகம் - வரலாற்றுக் கொடுமை அரங்கேறி 44 ஆண்டுகள் | 44Th Remembrance Of Burning Jaffna Public Library

தமிழ்ப் பண்பாட்டின் ஒரு பகுதி திரும்பப் பெற முடியாத வகையில் எரிந்து சாம்பலாகிப் போனது.

இருபதாம் நூற்றாண்டின் இன, பண்பாட்டு அழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படும் யாழ்ப்பாண நூலக எரிப்பு நடந்து இன்றோடு 44 ஆண்டுகள் ஆகின்றன.

பற்றி எரிந்த யாழ். பொது நூலகம் - வரலாற்றுக் கொடுமை அரங்கேறி 44 ஆண்டுகள் | 44Th Remembrance Of Burning Jaffna Public Library

தமிழர் பகுதியில் வாள் வெட்டு: சம்பவ இடத்திலே பலியான இளைஞன்

தமிழர் பகுதியில் வாள் வெட்டு: சம்பவ இடத்திலே பலியான இளைஞன்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய், மட்டக்களப்பு, திருகோணமலை, மெல்போன், Australia

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021