தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 45 முறைப்பாடுகள்
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 45 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பஃவ்ரல் (PAFFREL) அமைப்பு தெரிவித்துள்ளது.
அரச அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி (Rohana Hettiarachi) தெரிவித்துள்ளார்.
அந்த முறைப்பாடுகள் அனைத்திற்கும் தேவையான உடனடி நடவடிக்கைகளும் தலையீடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல்
சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்குத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவது குறித்து அமைச்சுகளின் செயலாளர்களுக்குத் தெளிவுப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு, அரச சொத்துகள் தொடர்பான பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட அதிகாரிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இதுவரை 14 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதுடன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட 8 வேட்பாளர்களும்,வேறு அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட ஒருவரும், சுயேட்சையாக போட்டியிட 05 வேட்பாளர்களும் இவ்வாறு கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |