கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ள அரச நிறுவனங்களின் செயலாளர்கள்
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவான கோப் (COPE) குழு அதனுடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் 2 ஆம் திகதி கோப் குழுவில் முன்னிலையாகுமாறு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் வைத்தியர் நிஷாந்த சமரவீர (Nishantha Samaraweera) தெரிவித்துள்ளார்.
கோப் குழுவினால் முன்னெடுக்கப்படும் பணிகள் மற்றும் அதன் செயல்பாடுகளை மேற்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து கலந்துரையாடுவதற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும்
தற்போது கோப் குழு 457 அரச நிறுவனங்களைக் கொண்டுள்ள நிலையில் அந்த நிறுவனங்களின் செயலாளர்களுக்கு இது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்த அடிப்படை தகவல்களைப் பெற இதன்போது திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடல் ஒக்டோபர் 2 ஆம் திகதி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
