பற்றி எரிந்த யாழ். பொது நூலகம் - வரலாற்றுக் கொடுமை அரங்கேறி 45 ஆண்டுகள்

Jaffna UNP Jaffna Public Library
By Theepan Jun 01, 2026 07:15 AM GMT
Report

யாழ்ப்பாணம் பொது நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டு 45 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, இன்றைய தினம் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில், நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது யாழ். பொது நூலக ஸ்தாபகர் கே. எம். செல்லப்பா மற்றும் யாழ். பொது நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்ட அதிர்ச்சியிலும் வேதனையிலும் உயிரிழந்த அருட்கலாநிதி H.S. தாவீது அடிகள் ஆகியோரின் உருவப்படத்திற்கு மலர் தூபி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து 45 ஆண்டுகள் நிறைவடைவதை குறிப்பிடும் வகையில் 45 விளக்குகள் ஏற்றப்பட்டது.

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியின் திடீர் இடமாற்றம் : அநுரவிற்கு பறந்த கடிதம்

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியின் திடீர் இடமாற்றம் : அநுரவிற்கு பறந்த கடிதம்

தீயிட்டு கொளுத்தப்பட்டன

மாநகர சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளர் டி. சி. அரவிந்தராஜ், யாழ்ப்பாண மாநகர சபையின் பிரதி முதல்வர் இ. தயாளன், பொது நூலகப் பிரதம நூலகர் அனுசியா சிவகரன், யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் ஜெ. மயூரன், நூலக உத்தியோகஸ்தர்கள் மற்றும் வாசகர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். 

பற்றி எரிந்த யாழ். பொது நூலகம் - வரலாற்றுக் கொடுமை அரங்கேறி 45 ஆண்டுகள் | 45Th Remembrance Of Burning Jaffna Public Library

1981 மே 31 அன்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் நடந்துகொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது.

அன்றிரவு யாழ்ப்பாணத்தின் பிரபல வணிக நிறுவனங்கள், கடைகள் என அனைத்தும் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

அன்று கொளுத்தப்பட்ட வன்முறைத் தீ மறுநாளும் கொழுந்துவிட்டு எரிந்தது ஜூன் முதலாம் திகதியும் இரவு யாழ்ப்பாணத்திலிருந்த கடைகள் பலவும் தீயிட்டு கொளுத்தப்பட்டன. அன்று முழுவதும் நிலவிய பதற்றச் சூழலை இந்தச் சம்பவம் மேலும் தீவிரப்படுத்தியது.

குஜராத் டைட்டன்ஸ் அணி சென்ற பேருந்தில் தீ - வீதியில் தவித்த வீரர்கள்

குஜராத் டைட்டன்ஸ் அணி சென்ற பேருந்தில் தீ - வீதியில் தவித்த வீரர்கள்

சிங்களப் பேரினவாத கும்பல்

அதைத் தொடர்ந்துதான் அந்த வரலாற்றுக் கொடுமை அரங்கேறியது. சிங்களப் பேரினவாத கும்பல் ஒன்று யாழ்ப்பாண பொதுசன நூலகத்தைத் திட்டமிட்டு கொளுத்தியது.

பற்றி எரிந்த யாழ். பொது நூலகம் - வரலாற்றுக் கொடுமை அரங்கேறி 45 ஆண்டுகள் | 45Th Remembrance Of Burning Jaffna Public Library

தமிழ்ப் பண்பாட்டின் ஒரு பகுதி திரும்பப் பெற முடியாத வகையில் எரிந்து சாம்பலாகிப் போனது. இருபதாம் நூற்றாண்டின் இன, பண்பாட்டு அழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படும் யாழ்ப்பாண நூலக எரிப்பு நடந்து இன்றோடு 45 ஆண்டுகள் ஆகின்றன.  

வானிலையில் மாற்றம்...! மக்களுக்கு வெளியான அறிவிப்பு

வானிலையில் மாற்றம்...! மக்களுக்கு வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026