சீனாவில் கடும் மழை : வெள்ளத்தில் மூழ்கும் நகரங்கள்: பலர் பலி
China
Climate Change
World
By Laksi
சீனாவில் (China) பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 47 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, தெற்கு சீனாவின் குவாங்டாங் (Guangdong) மாகாணத்தில் கனமழை பெய்ததால், வரலாறு காணாத வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் பிங்யுவான்( Pingyuan) கவுண்டியில் உள்ள 8 நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
உயிரிழப்புக்கள்
இந்த நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட பாலங்கள் சேதமடைந்துள்ளதுடன் விளைநிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதனையடுத்து மெய்ஷோவு ( Meizhou) நகரின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட மாவட்டம் ஒன்றில் 38 பேர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், குறித்த பகுதியின் வேறு இடங்களில் 9 பேர் பலியானதாக முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்