ஆஸ்திரேலியாவில் நில நடுக்கம்
By Sathangani
ஆஸ்திரேலியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந் நிலநடுக்கமானது நேற்று ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது.
4.6 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் சேதம்
ஆஸ்திரேலியாவின் கடற்கரையோரப் பகுதிகளான தாரி முதல் சிட்னி மற்றும் வொல்லொங்கோ வரை நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
2500 க்கும் மேற்பட்ட மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் சொத்து சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி