தொப்பை கொழுப்பை குறைக்கும் 8 அற்புத பானங்கள்

Weight Loss
By Beulah Aug 23, 2023 02:13 PM GMT
Report

மெட்டாபாலிசம் என்பது, நாம் உண்ணும் உணவுகளில் உள்ள ஊட்டச்சத்துக்களை உடலுக்கு தேவையான ஆற்றலாக மாற்றும் இரசாயன மாற்றத்தை குறித்து நிற்கிறது.

இந்த செயல்பாடு, உடல் கலோரிகளை எரிக்கும் வேலையைச் செய்யும். இதற்கு நீர்ச்சத்து அதிகமுள்ள உணவுகளும் சில ஆரோக்கியமான பானங்களும் உதவுகின்றன.

அதனால் அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் எடையையும் சீராக வைத்திருக்க உதவும்.

இப்பதிவின் ஊடாக மெட்டாபாலிசத்தை எனது உடலில் அதிகரிக்க செய்யும் எணவு வகைகள் குறித்து அறிந்துக்கொள்வோம்.

கிரீன் டீ​

தொப்பை கொழுப்பை குறைக்கும் 8 அற்புத பானங்கள் | 5 Drinks Increase Metabolism Burn Fat Naturally

க்ரீன் டீயில் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் தன்மை அதிகம். இதிலுள்ள கேட்டசின் என்னும் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்து கலோரிகளை எரிக்க உதவி செய்கிறது.

அதனால் தினமும் க்ரீன் டீ அடிக்கடி குடிக்கும் பழக்கம் இருந்தால் உங்களுக்கு எடை குறைதல் மிக வேகமாக நடக்கும்.

பிளாக் காபி

தொப்பை கொழுப்பை குறைக்கும் 8 அற்புத பானங்கள் | 5 Drinks Increase Metabolism Burn Fat Naturally

காபி யாருக்குதான் பிடிக்காது. காலையில் எழுந்ததும் நாம் குடிக்கும் முதல் பானமே அதுதான்.

ஆனால் காபியில் பால் சேர்த்து குடிக்காமல் பிளாக் காபியாக (சர்க்கரையும் சேர்க்காமல்) குடிப்பது நம்முடைய உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்யும்.

மெட்டபாலிசத்தையும் அதிகரிப்பதோடு உடலுக்குத் தேவையான எனர்ஜியையும் கொடுக்கிறது.

அதனால் பிளாக் காபியில் சிறிது இலவங்கப்பட்டை பொடி அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து குடித்து வர மெட்டபாலிசமும் அதிகரிக்கும். உடல் எடையும் குறையும்.

மூலிகை குடிநீர்

தொப்பை கொழுப்பை குறைக்கும் 8 அற்புத பானங்கள் | 5 Drinks Increase Metabolism Burn Fat Naturally

நம்முடைய உணவுகளில் சுவைகளை அதிகரிக்க நாம் பட்டை, சோம்பு கிராம்பு, ஏலக்காய் போன்ற மசாலா பொருள்களை பயன்படுத்துகிறோம்.

ஆனால் அந்த மசாலாக்கள் நம்முடைய உடலின் வெப்பநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளை எரிக்கவும் உதவி செய்கிறது.

இந்த மசாலாக்கள் பசியைக் கட்டுப்படுத்தி கலோரிகளின் அளவைக் குறைப்பதோடு மெட்டபாலிசத்தையும் அதிகரிக்கச் செய்து உடல் எடையை வேகமாகக் குறைக்க உதவி செய்கிறது.

சிட்ரஸ் பழ சாறுகள்

தொப்பை கொழுப்பை குறைக்கும் 8 அற்புத பானங்கள் | 5 Drinks Increase Metabolism Burn Fat Naturally

உடல் எடையைக் குறைக்க டயட்டில் இருப்பவர்கள் பலரும் காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதை பழக்கமாக வைத்திருப்பார்கள்.

ஆனால் எலுமிச்சை பழம் மட்டுமின்றி வைட்டமின் சி அதிகமுள்ள எலுமிச்சை, ஆரஞ்சு, கிரேப் ஃப்ரூட் ஆகிய அனைத்துமே உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியைக் கொடுக்கக் கூடியவை தான்.

வைட்டமின் சி நம்முடைய உடலுக்குத் தேவையான அடிப்படையான ஊட்டச்சத்தும் கூட. அதோடு கொழுப்புகளை எரித்து, உடலில் உண்டாகும் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தையும் குறைக்கச் செய்கிறது.

இதனால் தேவையில்லாத கொழுப்புகள் எரிக்கப்பட்டு உடல் எடை குறைகிறது.

​புரோட்டீன் ஸ்மூத்திகள் ​

தொப்பை கொழுப்பை குறைக்கும் 8 அற்புத பானங்கள் | 5 Drinks Increase Metabolism Burn Fat Naturally

புரோட்டீன் ஸ்மூத்திகள் புரதம் நம்முடைய உடலின் இயக்கத்துக்குத் தேவையான அவசியமான, அடிப்படையான ஊட்டச்சத்து ஆகும்.

இந்த புரதச்சத்து தான் தசைகளின் வளர்ச்சியை மேம்படுத்தவும் சாப்பிட்ட திருப்தியையும் திசுக்களில் ஏற்படும் சேதத்தை ரிப்பேர் செய்யவும் உதவி செய்கிறது.

அதோடு நம்முடைய உணவில் உள்ள மற்ற ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சிக் கொள்ளவும் ஜீரணத்தை மேம்படுத்துவதற்கான ஆற்றலைக் கொடுக்கவும் இந்த புரதச்சத்துக்கள் உதவி செய்கின்றன.

காலையில் முதல் உணவாக புரதங்கள் நிறைந்த ஸ்மூத்தியை எடுத்துக் கொள்ளும்போது வயிறு நிரம்பிய உணர்வும் கிடைக்கும்.

கலோரிகள் அதிகமாக எடுத்துக் கொள்வதையும் தவிர்க்கலாம். இவை மெட்டபாலிசத்தை தூண்டி உடல் எடை இழப்புக்கும் உதவி செய்யும்.

குறிப்பாக காலையில் ப்ரோ - பயோடிக் நிறைந்த யோகர்ட், தாவர மூலங்களில் இருந்து தயாரித்த புரோட்டீன் பவுடர் (சோயா, பாதாம், ஓட்ஸ்) ஆகியவற்றுடன் காய்கறிகள் மற்றும் பழங்கள் சேர்த்து சாப்பிடும் பழக்கத்தைப் பின்பற்றலாம்.

​இளநீர், தேங்காய் தண்ணீர்

தொப்பை கொழுப்பை குறைக்கும் 8 அற்புத பானங்கள் | 5 Drinks Increase Metabolism Burn Fat Naturally

உடலை அதிக நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்ள இளநீர் மிகச்சிறந்த பானமாக இருக்கும்.

இளநீரில் உள்ள இயற்கையான எலக்ட்ரோலைட்டுகள் உடலுக்குப் புத்துணர்ச்சியைக் கொடுக்கும். உடலின் செயல்பாடுகளை சீராக வைத்திருக்கவும் ஆரோக்கியமான மெட்டபாலிசத்துக்கும் தேங்காய் தண்ணீர் உதவி செய்யும்.

அதிலும் உடற்பயிற்சிக்கு பிறகு ஏற்படும் ஆற்றல் இழப்பை சரிசெய்ய இளநீர் உதவி செய்யும். உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்கவும் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்யும் அதன்மூலம் உடல் எடையைக் குறைக்கவும் இளநீர் உதவும். ​

ஐஸ் ஹெர்பல் டீ

தொப்பை கொழுப்பை குறைக்கும் 8 அற்புத பானங்கள் | 5 Drinks Increase Metabolism Burn Fat Naturally

மூலிகைகள் சேர்க்கப்பட்ட ஹெர்பல் டீ வகைகள் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவி செய்யும்.

குறிப்பாக பல்வேறு மூலிகைகள் சேர்க்கப்பட்ட ஹெர்பல் டீ உடலின் ஜீரண மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உடல் எடையைக் குறைக்கவும் உதவி செய்யும்.

அதிலும் கெமோமில் டீ, பெப்பர்மிண்ட் டீ, புதினா டீ ஆகியவை உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்பை எரித்து உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்யும்.எடையும் குறையும். ​

ஹைட்ரேட்டிங் வாட்டர்

தொப்பை கொழுப்பை குறைக்கும் 8 அற்புத பானங்கள் | 5 Drinks Increase Metabolism Burn Fat Naturally

வெறும் தண்ணீர் மட்டும் குடிப்பதன் மூலம் உடலில் நீர்ச்சத்து உண்டாகும் தான். அதோடு புதினா, வெள்ளரிக்காய், எலுமிச்சை துண்டுகள், இஞ்சி என மூலிகைகளை தண்ணீருக்குள் போட்டு வைத்துக் குடிப்பதன் மூலம் நீர்ச்சத்தோடு சேர்த்து அந்த பொருள்களில் உள்ள மினரல்களும் சேர்த்து நமக்குக் கிடைக்கும்.

நீர்ச்சத்து குறைபாடு உடலில் ஏற்பட்டால் மெட்டபாலிசத்தின் வேகமும் குறையும்.

அதனால் எடை குறைவது சிரமமாகி விடும். அதனால் நீர்ச்சத்தை அதிகரிக்கச் செய்து உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கவும் எடையை வேகமாகக் குறைக்கவும் இந்த தண்ணீர் உதவி செய்யும். 

ReeCha
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
நன்றி நவிலல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கோனாவில்

13 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
அகாலமரணம்

நீர்வேலி வடக்கு, Achères, France

03 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

காரைநகர், பசறை

10 Nov, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026