யாழிலிருந்து நெடுந்தூர போக்குவரத்து சேவை : தீர்வு வழங்க ஐவரடங்கிய குழு நியமனம்
யாழ்ப்பாணம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து தூர பிரதேசங்களுக்கு போக்குவரத்து சேவையை மேற்கொள்வது தொடர்பில் ஆராய்வதற்கு, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸின் பணிப்புரைக்கு அமைய ஐவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம். சமன் பந்துலசேன அவர்களின் தலைமையில் ஐவரடங்கிய குழு இன்று (01) நியமிக்கப்பட்டது.
பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கை
யாழிலிருந்து தூர பிரதேசங்களுக்கு சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கையின் பிரகாரம் நேற்று (29) நடைபெற்ற கூட்டத்தில், பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து உரிய தீர்வுகளை வழங்குவதற்கு குழு நியமிக்கப்படும் என ஆளுநர் அறிவித்தார்.
இந்த நிலையில் இன்று நியமிக்கப்பட்டுள்ள ஐவரடங்கிய குழுவின் ஊடாக யாழ் புதிய பேருந்து நிலையத்திலிருந்து, இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துளை இணைந்த நேர அட்டவணைக்கு அமைய தூர சேவைகளில் எவ்வாறு ஈடுபடுத்த முடியும் என்பது குறித்து ஆராயப்படவுள்ளது.
இந்த விடயம் தொடர்பான பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளை ஒரு வாரத்திற்குள் ஆளுநருக்கு சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |