கொழும்பில் வைக்கப்பட்டுள்ள சாந்தனின் உடல் (புதிய இணைப்பு)
புதிய இணைப்பு
தமிழகத்தில் நோய்வாய்ப்பட்டு உயிர் துறந்த அரசியல் கைதி தில்லையம்பலம் சுதேந்திரராஜா (சாந்தன்) அவர்களது புகழுடல் கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நீண்ட இழுபறிகள் பின்னராக எம்மால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர்,முருகையா கோமகன் தெரிவித்துள்ளார்.
எனினும் உடலம் மீதான பிரேத பரிசோதனைக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதால் அவரது சொந்த மண் பயணிப்பது தாமதமாகியுள்ளது.
தற்போது பிரேத பரிசோதனைக்காக நீர் கொழும்பு வைத்தியசாலையில் உடலம் கையளிக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனையின் பின்னராக உடலத்தை கையேற்றப் பின்னராக இறுதிக்கிரியைகள் பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்பிடும்.எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நான்காம் இணைப்பு
இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ள சாந்தனின் உடல் பிரேதப்பரிசோதனைக்காக நீர் கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்திலிருந்து சாந்தனின் உடல் கொண்டு வருவதற்கு தாமதமான நிலையில் தற்போது இந்த தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூன்றாம் இணைப்பு
கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த சாந்தனின் உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அவரது பெயரில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய தற்போது சந்தனுடைய உடல், விமான நிலைய பொதி களஞ்சிய சாலையில் (cargo) வைக்கப்பட்டுள்ளதாவும், ஆவண பதிவுகளின் பின்னர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கவுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
சென்னையில் உயிரிழந்த சாந்தனின் உடல் சற்று முன்னர் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
இதனை தொடர்ந்து சாந்தனின் உடல் கொழும்பில் இருந்து தரைவழியாக யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்படவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
சாந்தனின் உடல் கொழும்பில் உள்ள மலர்சாலை ஒன்றில் வைக்கப்பட்டு, பின்னரே யாழ்ப்பாணத்திற்கு கொண்டுச் செல்லப்படும் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, சாந்தனின் உடல் யாழ்ப்பாணத்தை சென்றடைந்ததும், அங்குள்ள தனியார் மலர்சாலையில் அவரது பூதவுடல் வைக்கப்படவுள்ளது.
பின்னர், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை உடுப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படவுள்ளதாக பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்
இறுதிகிரியைகள் தொடர்பான தகவல்கள் குறித்து இதுவரை எதுவும் தெரியவரவில்லை.
சாந்தனின் உடலை கையளிப்பதற்காக சட்டத்தரணி புகழேந்தியும் சென்னையில் இருந்து அதே விமானத்தில் இலங்கைக்கு வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
தமிழகத்தில் உயிரிழந்த சாந்தனின் பூதவுடலை கொண்டு வரப்படுவதில் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலை 09.30 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் சென்னையில் இருந்து கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அவரது உடல் அனுப்பி வைக்கப்படும் என்று இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் 10.38 மணியளவில் புறப்பட்ட விமானம் 11.36 மணியளவில் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை அடையவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |