மத்திய வங்கியில் இருந்து மாயமான 50 இலட்சம் ரூபா: தொடரும் விசாரணை
கடந்த வருடம் (2023) மத்திய வங்கி பெட்டகத்திலிருந்து காணாமல் போன 50 இலட்சம் ரூபா பணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயத்தை குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் இமேஷா முதுமாலா தென்னிலங்கை ஊடகமொன்று நேற்று (08) தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இருந்தும் இவ்வாறு மத்திய வங்கி பெட்டகத்திலிருந்து குறித்த பணம் மாயமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
முறைப்பாடு
இதன்படி, பணம் காணாமல் போன சம்பவம் தொடர்பான தகவல்கள் எந்த நேரத்திலும் வெளிச்சத்துக்கு வரலாம் என்ற நம்பிக்கை இருப்பதால் ரகசிய காவல்துறையினர் விசாரணையை நிறுத்த மாட்டார்கள் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் 11.04.2023 அன்று கோட்டை காவல்துறையில் முறைப்பாடு செய்வதற்கு மத்திய வங்கியின் அதிகாரிகள் சிலர் நடவடிக்கை எடுத்திருந்தமையும் குறிப்பிடத்கதக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
3 நாட்கள் முன்