புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 5 பேர் தப்பியோட்டம் - தேடும் பணி தீவிரம்
Sri Lanka Police
Vavuniya
By Vanan
2 மாதங்கள் முன்
வவுனியா - பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 5 பேர் தப்பியோடியுள்ளனர்.
இன்று (15) மாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையில் போதைப் பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான புனர்வாழ்வு இடம்பெற்று வருகின்றது.
தேடும் பணி தீவிரம்
இந்நிலையில் குறித்த புனர்வாழ்வு நிலையில் நீதிமன்ற உத்தரவுக்கமைய தங்க வைக்கப்பட்டு புனர்வாழ்வு வழங்கப்பட்டவர்களில் 5 பேர் தப்பியோடியுள்ளனர்.
விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்ட போதே குறித்த 5 பேரும் தப்பியோடியுள்ளதாக தெரியவருகிறது. தப்பியோடிய 5 பேரும் வடபகுதியைச் சேர்ந்தவர்களாவர்.
இதனையடுத்து குறித்த பகுதியில் புனர்வாழ்வு நிலையத்தைச் சேர்ந்த இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து அவர்களை மீள கைது செய்வதற்காக தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.


நிலைமாறு கால நீதிச் செயற்பாடுகளை ஏமாற்றும் மற்றுமொரு நடவடிக்கை
2 வாரங்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்