ராணுவத்தினரை போர் குற்றவாளிகளாக்கும் அரசாங்கம்: ஆத்திரத்தில் நாமல்!
விடுதலைப்புலிகள் அமைப்புக்கு நிதி வழங்கியவர்கள் முதலீட்டாளர்களாகவும், அந்த அமைப்பிடம் இருந்து நாட்டைப் பாதுகாத்த படையினர் போர்க்குற்றவாளிகளாகவும் பார்க்கப்படும் நிலையே தற்போதைய ஆட்சியின் கீழ் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதன்போது நாமல் மேலும் தெரிவிக்கையில், “வடக்கில் அப்பாவி இளைஞர்களின் கழுத்தில் சயனைட் குப்பிகளைத் தொங்கவிடுவதற்கு நிதி வழங்கிய தமிழ் டயஸ்போராக்களை மிகப்பெரிய முதலீட்டாளர்களாகக் கருதும் அரசு, போரை முடிவுக்குக் கொண்டு வந்த படையினரைக் குற்றவாளியாகப் பார்க்கின்றது.
அரசின் கலாசார சீரழிவு
முன்னாள் கடற்படைத் தளபதி சிறையில் உள்ளார். விடுதலைப்புலிகள் அமைப்பை ஊக்குவித்தவர்கள் இன்று முதலீட்டாளர்கள், அந்த அமைப்பிடம் இருந்து நாட்டைப் பாதுகாத்தவர்கள் போர்க்குற்றவாளிகளாகியுள்ளனர்.
விடுதலைப்புலிகளால் செய்ய முடியாமல்போன கலாசாரச் சீரழிவைத் தற்போதைய அரசு செய்கின்றது. அதனால்தான் பாடத்திட்டத்தில் இருந்து வரலாற்றுப் பாடத்தைக்கூட நீக்குவதற்கு முற்படுகின்றனர்.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ஆம் நாள் மாலை திருவிழா
