விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்: உரங்களின் விலை குறைப்பு
அரச உர நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் 5 வகையான உரங்களின் விலைகள் குறைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி உரத்தின் விலையை 1500 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில் இன்று (18) முதல் உரங்களின் விலைகள் குறைக்கவுள்ளதாக அரச உர நிறுவனத்தின் தலைவர் கலாநிதி ஜகத் பெரேரா (Jagath Perera) தெரிவித்துள்ளார்.
உரங்களின் விலைகள்
விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் (Ministry of Agriculture) இடம்பெற்ற கலந்துரையாடலில் உர விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 9000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட 50 கிலோ கிராம் APM உரம் 7200 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
8000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட 50 கிலோ கிராம் YPM உரம் 6200 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
விலை குறைப்பு
9750 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட 50 கிலோ கிராம் கறுவா (யூரியா) உரம் 7950 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
8000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட 50 கிலோ கிராம் கறுவா (SA) உரம் 6200 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
11000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட 50 கிலோ கிராம் TDM உரம் 9200 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |