விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்: உடனடியாக பறந்த உத்தரவு
Mahinda Amaraweera
Ministry of Agriculture
By Sumithiran
9 months ago
ஏற்றுமதி பயிர்களுக்கான உரங்களின் விலைகளை குறைப்பதற்கு கமத் தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி கறுவா, தேயிலை மற்றும் தென்னை போன்ற பெருந்தோட்டப் பயிர்களுக்கு பயன்படுத்தப்படும் பல வகையான உரங்களின் விலைகளே குறைக்கப்படவுள்ளன.
விவசாய அமைச்சரின் உத்தரவு
இந்த உரங்களின் விலைகளை 1500-2000 ரூபாவால் மேலும் குறைக்குமாறு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர(mahinda amaraweera) இன்று (17) அரச உரக் கம்பனிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த விலை குறைப்பை உடனடியாக நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

1ம் ஆண்டு நினைவஞ்சலி