யோகட் வாங்கித் தருவதாக அழைத்து செல்லப்பட்ட சிறுமி மாயம்
Sri Lanka Police
Missing Persons
Sri Lanka Police Investigation
By Jaso
காணாமற்போன சிறுமி
வெல்லவாய பகுதியில் ஐந்து வயது சிறுமி காணாமற் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வெல்லவாய- பள்ளிவாசலுக்கு பின்புறமாக பெற்றோருடன் வசித்து வந்த செத்மி அன்சிகா என்ற 5 வயது சிறுமியாருவரே நேற்று முன்தினம் (10) காணாமல் போயுள்ளார்.

யோகட் வாங்கிக்கொடுப்பதாக அழைத்து செல்லப்பட்ட சிறுமி
குறித்த சிறுமியின் வீட்டுக்கு கூலி வேலை செய்வதற்காக நபர் ஒருவர் வந்து செல்வதாகவும் நேற்று முன்தினம் (10) பகல் இரண்டு மணியளவில் வீட்டுக்கு வந்துள்ள குறித்த நபர், சிறுமிக்கு யோகட் வாங்கிக்கொடுப்பதாக கூறி அழைத்துச் சென்றுள்ளார்.
எனினும், மாலை 6 மணியாகியும் சிறுமி வீட்டுக்கு வரவில்லை என தெரிவித்து, சிறுமியின் தாய் வெல்லவாய காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து சிறுமியை தேடும் நடவடிக்கையில் வெல்லவாய காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.