சீனாவை புரட்டி எடுத்த சூறாவளி...! 50 பேர் உயிரிழப்பு
சீனாவில் (china) ஏற்பட்ட கேமி சூறாவளியினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த கேமி சூறாவளி காரணமாக சீனாவில் ஹுனான் (Hunan) மாகாணத்தில் உள்ள ஜிசிங் நகரில் கனமழை பெய்து வருகின்றது.
சூறாவளியின் எதிரொலியாக கனமழையும் கொட்டித் தீர்க்க, மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
மீட்புப் படையினர்
இதன் காரணமாக நூற்றுக்கணக்கான இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் 1,700க்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் 23,419 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த அனர்த்தத்தினால் சிக்குண்டு இதுவரை 50 பேர் வரை உயிரிழந்துள்ளனர் எனவும், 15 பேர் காணாமற் போயுள்ளனர் எனவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மீட்புப் படையினர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முகாமிட்டு, மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |