நாட்டில் புகையிலை பாவனையால் அதிகரிக்கும் மரணங்கள்!
நாட்டில் புகையிலை பாவனை காரணமாக தினசரி 50 மரணங்கள் பதிவாவதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலைய நிறைவேற்று பணிப்பாளர் சம்பத் டி சேரம் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் உலக சுகாதார அமைப்பின் அறிக்கையை சுட்டிக்காட்டியே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ”நாட்டில் தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கான 4 காரணங்களில் புகையிலை பாவனை பிரதான காரணமாக காணப்படுகிறது.
பாவனையாளர்களின் எண்ணிக்கை
அத்துடன், நாட்டில் சிகரெட் பாவனையாளர்களின் எண்ணிக்கை 9.1 சதவீதமாக குறைந்துள்ள நிலையில் நாட்டில் உள்ள சிகரெட் பாவனையாளர்களின் மொத்த எண்ணிக்கை 1.5 மில்லியனாக பதிவாகியுள்ளது.

இந்நிலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கை தொடர்பில் பல்வேறு முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டும் அவை இதுவரை நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்” என குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
குருதியால் நனைந்த ஈழ நாட்காட்டியில் குமாரபுரம் படுகொலையின் நினைவுகள்… 23 மணி நேரம் முன்