வங்கியின் முன்னால் விழுந்து கிடந்த ரூபா 50 இலட்சம் : பின்னர் நடந்த சம்பவம்
மாத்தறை இலங்கை வங்கி உயர்தரக் கிளையின் வாகன தரிப்பிடத்திற்கு அருகில் தரையில் விழுந்து கிடந்த 50 இலட்சம் ரூபாவை மாத்தறை நகரிலுள்ள கூரியர் சேவை நிறுவனமொன்றின் உதவி முகாமையாளர் இன்று (02) எடுத்து அதனை வங்கிக்கு மீள வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
அஹங்கம பகுதியைச் சேர்ந்த சந்தன உதயங்க (38) என்பவரே இந்தச் செயலைச் செய்துள்ளார்.
தவறுதலாக விழுந்திருக்கலாம்
வங்கி ஊழியர்கள் ஏ.டி.எம்.களுக்கு எடுத்துச் சென்ற அல்லது மத்திய வங்கியில் வைப்புச் செய்ய எடுத்துச் சென்ற 50 லட்சம் பணம் தரையில் விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

குவியல் குவியலாக தரையில் விழுந்த 50 லட்சம் ரூபாய் நோட்டுகளை போட்டோ எடுத்து, பின்னர் இதுபற்றி பாதுகாப்பு அதிகாரிக்கு தெரிவித்து வங்கி அதிகாரியை அழைத்து அவர்களிடம் அந்தப்பணத்தை ஒப்படைத்தார்.
அவரின் இந்த செயலை வங்கி முகாமையாளர் நன்றியுடன் பாராட்டியுள்ளார்.
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 5 மணி நேரம் முன்