தமிழர்பகுதியிலிருந்து கொழும்பு சென்ற பேருந்து கவிழ்ந்தது : 30 பயணிகள் அருந்தப்பு
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Jaso
மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் போக்குவரத்து பேருந்து ஒன்று மதுரங்குளிய 10 கனுவா பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் சுமார் 30 பயணிகள் உயிர் தப்பியுள்ளதாக மதுரங்குளிய காவல்துறையினர் தெரிவித்தனர்.
மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இந்த சொகுசு பேருந்து மதுரங்குளிய 10 கனுவா பிரதேசத்தில் மற்றுமொரு வாகனத்தை முந்திச் சென்றதாகவும், அதே நேரத்தில் பேருந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.
30 பயணிகள் அருந்தப்பு
பேருந்து ஒரு பக்கமாக கவிழ்ந்த போதிலும், அப்போது பேருந்தில் பயணித்த ஏறக்குறைய 30 பயணிகள் பெரும் முயற்சியில் பேருந்தில் இருந்து இறங்கியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
